மேல் நாட்டில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் செய்யப்படும் உணவு இது.
Posted by
ShareRecipes Staff
28/02/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :1-2 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Chicken
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
தேவையான பொருட்கள் :
- எலும்பில்லாத சிக்கன் - 600 கிராம் (நறுக்கியது)
- எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
- வெண்ணெய் - 30 கிராம் அல்லது 2 டேபில் ஸ்பூன்
- வெங்காயம் - 200 கிராம் அல்லது 1 பெரியது
- தக்காளி - 250 கிராம் அல்லது 3 பெரியது
- இஞ்சி - 1/2 " அகலமுள்ள 1" நீட்டமான துண்டு
- பூண்டு - 2 பல் (பெரியது)
- தயிர் - 4 டேபில் ஸ்பூன்
- முந்திரி (பொடியாக்கியது) - 30 கிராம் அல்லது 22-24
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- க்ரீம் - 150 மி.லி
- சர்க்கரை - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
- உப்பு - சுவைக்கேற்ப
- ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை ( தேவைபட்டால்)
- தண்ணீர் - தேவையான அளவு
கோழியை ஊறவைக்க
- வினிகர் - 1 டேபில் ஸ்பூன்
- தயிர் - 2 டேபில் ஸ்பூன்
- பூண்டு - 3 பல் நசுக்கியது
- மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
மசாலா பொடிகள்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
முறை :
- சிக்கனுடன் தயிர், வினிகர், உப்பு, மஞ்சள் தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து ஊற வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- சூடான பெரிய கடாயில் பாதி அளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறம் ஆகும் வரை வறுக்கவும்.
- சூட்டில் இருந்து வெங்காயத்தை வெளியே எடுத்து குளிர வைக்கவும்.
- வறுத்த வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் தக்காளி ஆகியவற்றை அரைக்கவும்.
- கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும்.
- சிக்கன் துண்டுகளையும் வெண்ணெயையும் அதில் போட்டு, 4-5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கிளறவும் .
- மிளகாய்த் தூளையும் கரம் மசாலாவையும் சேர்த்து கிளறவும் .
- உப்பு (ஒரு தேக்கரண்டி) மற்றும் சர்க்கரை சேர்த்துவிட்டு, நன்றாகக் கலக்கவும்.
- பிறகு, கடாயில் 300 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் சேர்க்கவும். கடாயை மூடிவிட்டு சுமார் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- பிறகு, கலர் மற்றும் முந்திரி பவுடரை சேர்த்துவிட்டு, தேவை எனில் தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் குழம்பை 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- பிறகு அடுப்பை அணையுங்கள்.
- பரிமாறுவதற்கு முன்பு க்ரீமைச் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலையைக் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : சோறு/ சப்பாத்தி/ நாண் அல்லது கோதுமை பிரட்டுக்கு ஏற்றது இது. மாற்றத்திற்கு முயற்சிக்கவும் இதை முயற்சிக்கவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு