பிரொக்கோலி மஷ்ரூம் பொரியல்
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
Posted by
ShareRecipes Staff
09/05/2013
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
உணவு :
கிழக்கத்திய உணவு»சீன உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Broccoli, Vegetarian
தேவையான பொருட்கள் :
- பிரொக்கோலி -1 சிறியது
- மஷ்ரூம் - 200 கிராம்
- பூண்டு - 3 சிறிய பல்லு
- காய்ந்த மிளகாய் - 1 - சிறு சிறு துண்டுகளாக கிள்ளிக் கொள்ளவும்
- வெங்காயம் வெட்டியது - 1 மேசை கரண்டி (தேவை பட்டால் )
- சோயா சாஸ் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் - 1 மேசை கரண்டி
- எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
முறை :
- காய்கறியை கழுவி கொள்ளவும்.
- பிரொக்கோலியை சிறிய பூக்களாகவும், மஷ்ரூமை 4 துண்டுகளாகவும், வெங்கயத்தை பெரிதாகவும், பூண்டை பொடியாகவும் வெட்டிக் கொள்ளவும்.
- பிரொக்கோலியை ஒரு பாத்திரத்தில் போட்டு வெண்ணீர் ஊற்றி 2-3 நிமிடம் காத்திருந்து வடிகட்டவும்.
- வேகமான சூட்டில் அடுப்பை பற்ற வைத்து, பெரிய கடாயை வைக்கவும்.
- எண்ணெய் ஊற்றி சூடானவுடன், வெட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பிரொக்கோலியையும் மஷ்ரூமையும் சேர்த்து 2-3 நிமிடத்துக்கு வதக்கவும். பிரொக்கோலி சாப்ட் ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- சோயா சாஸ் சேர்த்து மூடி போட்டு மிதமான சூட்டில் 2-3 நிமிடத்துக்கு வேக வைக்கவும். அடுப்பை அணைக்கவும். ஆய்ஸ்டர் சாஸ் சேர்ப்பதனால் அடுப்பை அணைத்தவுடன் சேர்க்கவும்.
- பிரொக்கோலி - மஷ்ரூம் பொரியலை சூடாக பரிமாறவும்
குறிப்புகள் : சாதத்திற்கு ஆட்டுக்கறி குழம்பு அல்லது கோழிக்கறி குழம்பு சேர்த்து இதையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். நூடில்ஸிற்கும் ஏற்றதாகும்.
மற்ற பெயர்கள் : Broccoli mushroom stirfry
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு