மீன் கட்லெட்
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 30-45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
செய்கிறது : 15 - 20
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»பசி தூண்டி»
தேவையான பொருட்கள் :
- நன்கு சமைத்து பதப்படுத்தப்பட்ட மீன் - 250 கிராம்
- உருளைக் கிழங்கு - 200 கிராம் அல்லது 1 பெரியது
- கேரட் - 75 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு
- வெங்காயம் - 100 கிராம் (அல்லது) 1 சிறியது
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி
- முட்டை - 2
- பிரட் தூள்கள்(Breadcrumbs) - 150 கிராம்
- உப்பு - சுவைக்கேற்ப
முறை :
- வெங்காயம், மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பதப்படுத்தப்பட்ட மீன்களை தண்ணியில்லாமல் நன்கு பிழிந்து மசித்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தண்ணீருடன் உப்பு சேர்த்து அதில் உருளைக்கிழங்கை வேக வைக்கவும். ஆறிய பின்பு, உருளைக்கிழங்கின் தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
- கடாயை நன்கு சூடுப்படுத்தி, 2-3 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், மற்றும் கேரட்டை சேர்த்து 3-4 நிமிடம் வரை வதக்கவும்.
- பின்பு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- வறுத்த பொருட்களுடன், மீன், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.
- 3 செ.மீ அளவு உள்ள மீன் உருண்டைகளை கட்லெட் போல் தட்டையாக்கிக் கொள்ளவும்.
- முட்டைகளை அடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
- பிரட்தூள்களை தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
- ஒரு கடாயில் மிதமான சூட்டில் எண்ணெய் சேர்க்கவும்.
- கட்லெட்டை முதலில் முட்டையில் நனைக்கவும்.
- பிறகு பிரட் தூளில் நனைக்கவும்.
- ஒரே சமயத்தில் 4-5 கட்லெட்டுகளை பொன்நிறம் வரும்வரை இரண்டு பக்கமும் நன்கு வறுக்கவும்.
- இதே போல் மற்ற கட்லெட்டுகளையும் வறுக்கவும்.
குறிப்புகள் : கெட்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு