பருப்பு துவையல்
பல்வேறு குழம்புக்கு, கஞ்சி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பருப்பு துவையல் சுவையாக இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
26/02/2014
Click to rate this post!
[Total: 3 Average: 2.3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Chutney
பிரதான மூலப்பொருள் :
பருப்பு / கடலை
செய்முறை வகை :
காலை உணவு சுவைச்சாறு(sauce) / சட்னி மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- பாசிப்பருப்பு - 4 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 3
- தேங்காய் துருவல் - 1 டேபில் ஸ்பூன்
- வெங்காயம் - 1/2 சிறியது அல்லது சின்ன வெங்காயம் 5-6
- உப்பு (சுவைக்கேற்ப)
முறை :
- சட்டி ஒன்றை சூடுபடுத்தவும்.
- அதில் பாசிப்பருப்பு மற்றும் மிளகாயை போட்டு 3 - 4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- பின்னர் மிளகாயை எடுத்துவிட்டு பருப்பை மட்டும் தண்ணியில் 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், வெங்காயம், வறுத்த பாசிப்பருப்பு, மிளகாய் மற்றும் 2 - 3 டேபில் ஸ்பூன் தண்ணீருடன் அதை கலந்து நன்றாக அரைக்கவும்
குறிப்புகள் : இதனை கஞ்சி சோறு , புளி சாதம்,பூண்டு குழம்பு, ரசம் அல்லது நோம்பு கஞ்சியுடன் பரிமாறவும்.
மற்ற பெயர்கள் : Paruppu chutney
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு