Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Plantain, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- 300 கிராம் அல்லது 3 வாழைக்காய்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் (தேவைப்பட்டால்)
- 2 டேபில் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- தண்ணீர் - தேவையான அளவு
முறை :
- வாழைக்காயை தோல் சீவி அரை சென்டிமீட்டர் தடிமனுக்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை அதில் போடவும்.
- நறுக்கிய வாழைக்காய் துண்டங்களையும் அரை ஸ்பூன் உப்பும் போட்டு 2 - 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பின்னர் 8 - 10 நிமிடங்களுக்கு சட்டியை மூடி வைக்கவும்.
- சட்டியின் அடியில் வாழைக்காய் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் வகையில் ஒரிரு முறை சட்டியை திறந்து கிளறி விடவும்.
- வாழைக்காய் துண்டுகள் வெந்தவுடன் அதில் சீரகத் தூளை போட்டு மொறுப் மொறுப்பாகும் வரை 5 - 6 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும்
குறிப்புகள் : இது சாதம், Rasam, Mung Dal curry அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
மாற்றத்திற்கு வாழைக்காய் பொடிமாசை முயற்சிக்கவும்.
மற்ற பெயர்கள் : Plantain stirfry, vazhakkai poriyal
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு