தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.
Posted by
ShareRecipes Staff
05/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 2-3
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
South Indian Vegetarian, spinach
தேவையான பொருட்கள் :
- கீரை (ஏதேனும்) - 150 கிராம்
- தேங்காய் பால் - 200 மி.லி
- பச்சை மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 1 வெங்காயம் சிறியது
- சீரக பொடி - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
முறை :
- கீரையை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- அதில் உள்ள மண் நீங்க நன்றாக சுத்தம் செய்யவும்.
- ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி அதில் எண்ணெய் விடவும்.
- கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாயை அதில் போட்டு வதக்கவும்.
- பின்னர் அதில் கீரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விடவும்.
- பாத்திரத்தை மூடி வைத்து 2 - 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- பின்னர் அதில் தேங்காய் பாலை கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்திடவும்
குறிப்புகள் : சாதம் வேகும் பொது ஒரு கப் தண்ணீர் ஜாஸ்தி ஊற்றி , அது கொதிக்கும் போது, அந்த கப் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும் அல்லது அரிசி கழுவின தண்ணீர் ஒரு கப் எடுத்து வைக்கவும். ஏனென்றால், இந்த தண்ணீரில் கீரையை சமைத்தால் சுவை அதிகமாக இருக்கும். சிரம பட வேண்டாம் என்றால், சாதாரண தண்ணீரில் கீரையை சமைக்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு