இட்லி, கூழ் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி, புதினா மணத்தோடு வெங்காயம், தக்காளி சேர்ந்து அருமையாக இருக்கும் .
Posted by
ShareRecipes Staff
20/03/2014
Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Chutney
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
இரவு உணவு காலை உணவு சுவைச்சாறு(sauce) / சட்னி
தேவையான பொருட்கள் :
- 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 3 காய்ந்த மிளகாய்
- 2 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
- 2 மேசைக்கரண்டி புதினா இலை
- சிறுதுளி பெருங்காயம் (விரும்பினால்)
- 100 கிராம் வெங்காயம் அல்லது 1 சிறியது
- 2 தக்காளி (150 கிராம்)
- 3 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1 பல் பூண்டு
- சிறு துளி புளி
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
- சுவைக்கேற்ப உப்பு
முறை :
- கொத்தமல்லி இலை, புதினா, தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- பூண்டை உரித்து, தேங்காயை நன்றாகத் துருவிக் கொள்ளவும்.
- கடாயை சூடேற்றி எண்ணெய் ஊற்றவும்.
- காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுக்கவும்.
- மற்ற அனைத்து பொருட்களையும் கடாயில் போட்டு சுமார் 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டு சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
குறிப்புகள் : இதை இட்லியுடன் சாப்பிடலாம்.. பச்சை மிளகாய் பிடிக்கும் என்றால், காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயை உபயோகிக்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு