சேனைக் கிழங்குப் பொரியல்

சேனைக் கிழங்கு பொரியல் எந்த வகையான சைவ குழம்பிற்கும் ஏற்றது.

Posted by ShareRecipes Staff
20/03/2014

Default Image
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it

தயாரிப்பு நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 3-4

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : காய்கறி
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • 300 கிராம் சேனைக்கிழங்கு
  • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள் (விரும்பினால்)
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 மேசைக் கரண்டி எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • சுவைக்கேற்ப உப்பு

முறை :
  1. சேனைக் கிழங்கைக் கழுவி, உரித்து 1 செ.மீ அளவு கொண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றி எண்ணெயை ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் , கறிவேப்பிலை, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள்த் தூள் சேர்க்கவும்.
  4. பிறகு நறுக்கிய சேனைக் கிழங்கு மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடம் வரை வறுக்கவும். கடாயை நன்றாக மூடி 8-10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  5. அவ்வப்போது பாத்திரத்தைத் திறந்து காயை நன்றாகக் கிண்டி விடவும். காய் பாத்திரத்தில் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
  6. கடைசியில் சிறிது சீரகம் சேர்த்து நன்றாக மொறுமொறுப்பாககும் வரை வறுக்கவும்.

குறிப்புகள் : மற்றொரு முறை: சேனைக் கிழங்கோடு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, வறுக்கும் கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கலாம். சாதம் மற்றும்சாம்பார்., ரசம், மோர்க் குழம்பு, முட்டை புளிக்குழம்பு , பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

மற்ற பெயர்கள் : Saenaikizhangu poriyal, Saenakilangu poriyal


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close