எளிமையான முறையில் செய்யும் இதை சாதத்துடன் சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
20/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- 350 கிராம் தயிர்
- சின்ன வெங்காயம் – 10-12 அல்லது 1 வெங்காயம் சிறியது
- 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 1/8 தேக்கரண்டி மஞ்சத் தூள்
- 2 மேசைக்கரண்டி கடலை மாவு
- 1 மேசைக் கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 5-6 கறிவேப்பிலை
- 100 கிராம் வெண்டிக்காய் / சேப்பங்கிழங்கு
- தேவைக்கேற்ப தண்ணீர்
முறை :
- மூன்றுக்கு நான்கு (3/4) என்ற அளவில் தயிரை எடுத்து கடலை மாவுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- மீதமிருக்கும் தயிரை ஒரு கப் தண்ணீருடன் கலந்து மோராக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்; கறிவேப்பிலையை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்; தேவையான அளவு இஞ்சியை நசுக்கிக் கொள்ளவும்.
- ஒவ்வொரு வெண்டிக்காயையும் மும்மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டிக்காய்க்குப் பதிலாக சேப்பங்கிழங்கைப் பயன்படுத்துவதாக இருந்தால், இவற்றைத் தனியாக தண்ணீரில் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை உரித்து, ஒவ்வொன்றையும் 2-3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- நசுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வறுக்கவும். பிறகு காய்கறிகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
- மஞ்சள்த் தூள், கலக்கி வைத்த மோர், உப்பு மற்றும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, கடாயை மூடி 5-6 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.
- தயிர்க் கலவை மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
- தயிர் முறியாத அளவிற்கு குறைந்த சூட்டில் சில நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்கவும்.
குறிப்புகள் : சாதத்திற்கு சரியான சேர்ப்பு உணவு இது. சிறிய மாற்றத்திற்கு புளிக் குழம்புஅல்லது பூண்டுக் குழம்பு-ஐ முயற்சிக்கவும். இன்னொரு முறையில் மோர்க் குழம்பைசெய்து பார்க்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு