முட்டைக்கோஸ் பொரியல்
Click to rate this post!
[Total: 2 Average: 3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 4-5
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Cabbage, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- முட்டைக்கோஸ் - 200 கிராம் அல்லது 1/3 நடுத்தர அளவு
- வெங்காயம் - 75 கிராம் அல்லது 1 சிறியது
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 5-6
- காய்ந்த மிளகாய் - நடுத்தர காரமானது - 2 / மிகவும் காரமானது - 1
- சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி (விருப்பமானால்)
- தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி (விருப்பமானால்)
- எண்ணெய் - 3-4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் - தேவைக்கேற்ப
முறை :
- முட்டைக்கோஸை சுத்தம் செய்து பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கவும்; மிளகாயை 3-4 துண்டங்களாகப் உடைத்து வைக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயினை சூடேற்றி, எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும் .
- நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்; சில நிமிடங்கள் வறுக்கவும்.
- ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மூடியிட்டு சுமார் 5-10 நிமிடங்கள் வேகவிடவும்.
- சமைக்கும் போது, கடாயின் கீழே காய்கறிகள் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க, மூடியைத் திறந்து, காய்கறியை சில முறைக் கிளறவும்.
- முட்டைக்கோஸ் சமைக்கப்பட்ட பின், சீரகத் தூள் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
- தேங்காய்த் துருவல் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
குறிப்புகள் : உங்களுக்கு பச்சை மிளகாய் விருப்பமானால், காய்ந்த சிவப்பு மிளகாய்க்குப் பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தவும். சாதம் காய்கறி புளிக் குழம்பு, பூண்டு குழம்பு, முட்டை புளிக் குழம்பு அல்லது ஆம்லெட் புளிக் குழம்பு ஆகியவற்றுக்கு ஏற்றது.
மற்ற பெயர்கள் : kose poriyal
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு