சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
12/05/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
செய்கிறது : 8 -10
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Indian bread
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி கோதுமை / ரவை
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு (ஆட்டா) – 4௦௦ கிராம் + 1௦௦ கிராம் உருட்ட
- வெதுவெதுப்பான தண்ணீர் – 125 மில்லி
- வெதுவெதுப்பான பால் – 150 மில்லி
- உப்பு – சுவைக்கேற்ப
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 30 மில்லி (விரும்பினால்)
கீமா உள்ளடம்
- கொத்து இறைச்சி (கீமா) – 200 கிராம்
- வெங்காயம் – 150 கிராம்
- இஞ்சி – 1/2” பெரியது மற்றும் 1” மொத்தமான துண்டு
- பூண்டு – 2 பல்லு
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- 1 தேக்கரண்டி தக்காளி பூரி அல்லது 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
முறை :
- அகலமான கிண்ணத்தில் 350 கிராம் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உப்பு, சர்க்கரை, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து பிசையவும். மீதி 50 கிராம் கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக பிசையவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். ஒரு மணி நேரம் வைக்கவும்.
- மாவு தயாராகும் வரை கீமா உள்ளடம் செய்யவும்.
- ஒரு மணி நேரம் கழித்து, 4-5 செ.மீ உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- சப்பாத்தி கட்டை எடுத்து உருண்டைகளை சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கீமா கலவையை எடுத்து, சப்பாத்தி நடுவில் வைத்து பரப்பிவிடவும்.அனைத்து ஓரத்தையும் மூடவும்.
- 9”-10” சப்பாத்திகளாக மீண்டும் தேய்த்து தோசை கல்லில் போடவும்.
- பொன் நிறம் வரும் வரை மிதமான சூட்டில் சுடவும்.
- விரும்பினால் எண்ணெய் சேர்க்கலாம்.
- கீமா சப்பாத்தி சாப்பிட தயார்.
கீமா கலவை செய்முறை:
- கீமாவை அலசி வடிகட்டவும்.
- வெங்காயம் மற்றும் மிளகாயை நறுக்கி கொள்ளவும், பூண்டையும் இஞ்சியையும் துருவிக் கொள்ளவும்.
- கடாயை சூடாக்கி, அதில் கீமாவை சேர்த்து தண்ணீர் ஆவியாகும் வரை வேக வைக்கவும்.
- கடாயில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.
- தக்காளி பூரி அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- கீமாவை சேர்த்து 7-8 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும்.
- மூடியை திறந்து தண்ணீர் ஆவி ஆகும் வரை சமைக்கவும்.
- கடாயில் இருந்து நீக்கி தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
குறிப்புகள் : தயிரில் ஊறுகாயை சேர்த்து கலக்கி இதனுடம் சாப்பிடலாம்.
மற்ற பெயர்கள் : Keema Parotta,Keema Roti
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு