காய்கறி மற்றும் பாசிப் பருப்பு சேர்த்து சமைக்கும் இந்த குழம்பு சாம்பாருக்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு செய்யலாம்.
Posted by
ShareRecipes Staff
07/05/2014
Click to rate this post!
[Total: 1 Average: 2]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Muslim Meal
பிரதான மூலப்பொருள் :
காய்கறி பருப்பு / கடலை
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- பாசிப் பருப்பு – 1௦௦ கிராம்
- வெங்காயம் – 1 சிறியது
- பூண்டு – 1 சிறிய பல்லு (விரும்பினால்)
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி – 1 சிறியது
- முருங்கைக்காய் – 1/2
- கத்திரிக்காய் – 3
- கேரட் – 1/2
- சொரக்காய் – 5௦ கிராம் அல்லது 1/4 சொரக்காய்
- மாங்காய் – 2-3 2” துண்டுகள் (விரும்பினால்)
- நெய் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை - 6-7
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா தூள்கள்:
- சோம்புத் தூள் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
முறை :
- பருப்பை அலசி வடிக்கவும்.
- முருங்கைக்காயை 3-4 துண்டுகளாக வெட்டவும். கத்திரிக்காயை 5-6 துண்டுகளாக வெட்டவும். காரட் மற்றும் சொரக்காய் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாயை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரை சூடாக்கிக் கொள்ளவும்.
- 225ml தண்ணீர், பூண்டு, மிளகாய், நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் பருப்பை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்.
- குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு சின்ன கடாய் எடுத்து சூடாக்கிக்கொள்ளவும்.
- அதில் சிறிது எண்ணெய், கருவேப்பிலை மற்றும் சோம்புத் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- இதை பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய், எலுமிச்சைசாறு, மாங்காய் துண்டுகள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- நன்றாக கிளறி சில நிமிடங்கள் மூடிவைத்து கொதிக்க விடவும்.
குறிப்புகள் : சாதம், சிக்கன் ஷேர்வா, இறால் மசாலா, மீன் வறுவல், மட்டன் ஷேர்வா, மிளகு-ஜீரக மட்டன் மசாலா அல்லது கேரட் சாலட் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. முட்டை பருப்பு ஆனத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.
மற்ற பெயர்கள் : Kaikari paruppanam
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு