புடலங்காய் கூட்டு
புடலங்காய் கூட்டு, சாதம் மற்றும் தென்னிந்திய குழம்புகளுக்கு சுவையான சைடு-டிஷ் ஆகும்.
Posted by
ShareRecipes Staff
27/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 3.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 4-5
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Kootu, Marrow, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- புடலங்காய் – 1 அல்லது 250 கிராம்
- பாசி பருப்பு – 75 கிராம் அல்லது 1/3 டீ கப்
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1 மிதமான காரத்துக்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில (விரும்பினால்)
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- பருப்பை அலசி வடிக்கவும்.
- காயை சீவி, வெட்டி, விதிகளை நீக்கி 1cm துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, பருப்பு, 1/2 கப் தண்ணீர், பாதி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- மூடி வைத்து பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- தனியாக ஒரு வாணலியில் காயுடன் உப்பு மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கவும்.
- துருவிய தேங்காய், சோம்பு, மிளகாய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து 1-2 மேசைக்கரண்டி தண்ணீருடன் பசையாக அரைக்கவும்.
- அரைத்த கலவை மற்றும் சமைத்த பருப்பை காய்கறியுடன் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும். இதை சமைத்த காய்கறியுடன் சேர்க்கவும்.
- நன்கு கிளறி பரிமாறவும்.
குறிப்புகள் : இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளிக் குழம்பு, முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு கீரை-பருப்பு குழம்பு-௦2/சுரைக்காய் கூட்டு /பச்சை தக்காளி கூட்டு செய்து பார்க்கலாம். புடலங்காய்க்கு பதிலாக பூசணிக்காய்/ பரங்கிக்காய்/ சுரைக்காய் பயன் படுத்தலாம்.
மற்ற பெயர்கள் : snake gourd lentils curry, Pudalangaai kootu
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு