இந்திய மசாலா வகைகளுடன் வெண்டிக்காயை சேர்த்து தயாரிக்கப்படும் தென்னிந்திய வகை சத்தான உணவாகும்.
Posted by
ShareRecipes Staff
30/01/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
South Indian Vegetarian, Vendikkai
தேவையான பொருட்கள் :
- வெண்டிக்காய் - 300 கிராம்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 5-6
- காய்ந்த மிளகாய் - 1 (3-4 துண்டுகளாக உடைத்தது)
- ஜீரகத் தூள் - 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
- எண்ணெய் -3 டீஸ்பூன்
முறை :
- வெண்டிக்காய்களை கழுவி சுத்தமான துணியால் துடைத்து வைக்கவும்.
- ஒவ்வொரு வெண்டிக்காயையும் 7-8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயை சூடு செய்து எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும், அதில் உளுத்தம்பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.
- அதில் வெண்டிக்காய் துண்டுகள் மேலும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
- 5-10 நிமிடங்களுக்கு மூடாமல் வேக வைக்கவும்.
- அவ்வப்போது வெண்டிக்காய்களை கிளறி விடவும்.
- இப்போது கடாயை மூடி வைத்து மேலும் 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும். அப்போது தான் அடிபிடிக்காமல் இருக்கும்,
- வெண்டிக்காய்கள் வெந்ததும் அதனுடன் ஜீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து மேலும் 4-5 நிமிடங்களுக்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- அவ்வப்போது அடிவரை நன்கு கிளறி விடவும்
குறிப்புகள் : இது சாதம் மற்றும் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு,ரசம் அல்லது சாம்பார் ஆகிய வற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.
மற்ற பெயர்கள் : vendikkai poriyal
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
|
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு